தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் ஆபத்து: மா.சத்திவேல் எச்சரிக்கை
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கும் பயங்கரவாதிகளின் முயற்சி நேற்று தோல்வி அடைந்துள்ளதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் உயர்ஸ்தானிகரை கொலை செய்ய சதி செய்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் நேற்று(10) விடுவிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஐ.பி.சி தமிழுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டம், அவர்களின் இளமையையும் குடும்ப வாழ்வையும் எதிர்காலத்தையும் சூறையாடியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மா.சத்திவேலின் வலியுறுத்து
பயங்கரவாத தடைச் சட்டம் என்பது மிகவும் பயங்கரமானது என்பது, மிகவும் பயங்கரமானது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அருட்தந்தை மா.சத்திவேல் கூறியுள்ளார்.
வாழ்கை சுறையாடிய பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி, குற்றவாளியாக்க முயன்றவர்கள் தோல்வி அடைந்துள்ளார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்க முற்பட்டவர்கள் பயங்கரவாதிகள் எனவும் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் மா.சத்திவேல் வலியுறுத்தினார்.
பயங்கரவாத தடைச் சட்டம் தமிழர்களுக்கு எதிராகவும் பயங்கரவாத தடைச் சட்டம் தமிழர்களின் அரசியலுக்கு எதிராகவும் கொண்டுவரப்பட்டது என்பதால், அந்த குற்றவாளிகளுக்கு தண்னை வழங்குவது இந்த நாட்டில் நிறைவேறாத ஒன்று எனவும் அவர் கூறியுள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்
இளைஞர்கள் பலவந்தமாக குற்றவாளிகள் ஆக்கப்படுகின்றார்கள் என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது எனவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் வரை, ஜனநாயகமும் மனித சுதந்திரமும் காப்பாற்றப்படப் போவதில்லை என மா.சத்திவேல் குறிப்பிட்டுள்ளார்.
ஒட்டுமொத்த வாழ் இலங்கை மக்களும் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கு பயங்கரவாத தடைச் சட்டத்தை எதிர்ப்பதுடன், புதிததாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தையும் எதிர்க்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
தமிழ் மக்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டுவரப்பட்ட போதிலும் தற்போது முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கு எதிராகவும் கொண்டுவரப்படவுள்ளது எனவும் மா.சத்திவேல் எச்சரித்துள்ளார்.
1983 ஆம் ஆண்டே குட்டிமணி போன்றவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் பாரதூரத்தை எடுத்துக் கூறியிருந்தார்கள் எனவும் அருட்தந்தை மா.சத்திவேல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.