விசாரணையில் திருப்தியில்லை - சிரேஷ்ட ஊடகவியலாளர் கவலை
சிரேஷ்ட ஊடகவியலாளர் சாமுதித சமரவிக்ரம , தனது வீடு மீதான தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் தாம் திருப்தியடையவில்லை என தெரிவித்துள்ளார்.
வீடு மீதான தாக்குதல் தொடர்பான சம்பவம் தொடர்பில் விசாரிக்க காவல்துறை மா அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்த போதிலும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என சமரவிக்ரம தெரிவித்தார்.
நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பில் கல்கிசை பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என சமுதித சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
தனது வீடு தாக்கப்பட்டதையடுத்து போதிய பாதுகாப்பை வழங்குமாறு கோரியபோதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
