வெளிநாடு செல்லவுள்ளவர்களுக்கு வெளியான அறிவிப்பு
srilanka
abroad
corona vaccine
By Sumithiran
தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு செல்ல உள்ளோருக்கு அரசாங்கம் புதிய திட்மொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி அவர்கள் செல்லவுள்ள நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி வகைகளை செலுத்தவுள்ளதாக தொழில் உறவுகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சினோபாம் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ள வெளிநாட்டுப் பணியாளர்களை தமது நாடுகளுக்கு அனுமதிப்பதில்லை என மத்திய கிழக்கின் சில நாடுகள் தீர்மானித்துள்ளன.
இதனால் குறித்த நாடுகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை தமக்கு வழங்குமாறு, அந்நாடுகளுக்கு தொழில்வாய்ப்புக்காக செல்ல எதிர்பார்த்துள்ளவர்கள் அண்மையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.