கோட்டாபயவின் கூட்டத்திற்கு வரவேண்டாம்! அமைச்சருக்கு சென்ற அறிவித்தல்
அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நடைபெற்ற அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கலந்துகொள்ளும் கூட்டத்திற்கு வர வேண்டாம் என்று அமைச்சருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன
பசளை பிரச்சினையால் விவசாயிகள் கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மீது கடும் எதிர்ப்பை கொண்டுள்ளதால் அரச தலைவர் இருக்கும் மேடையில் கமத்தொழில் அமைச்சருக்கு எதிராக சத்தமிட்டு மக்கள் எதிர்ப்பை வெளியிட்டால், அது அந்தளவுக்கு பொருத்தமாக இருக்காது என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொதுஜன பெரமுனவின் பிரதான பேச்சாளர்களில் ஒருவரான மகிந்தானந்த அளுத்கமகே இம்முறை சல்காது மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொள்ளவில்லை.
எவ்வாறாயினும் கூட்டத்தில் கலந்துக்கொண்ட மக்கள் பசளை பிரச்சினையை எழுப்பி, தமது இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரியதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
