சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு
2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவேண்டிய சாதாரண தர பரீட்சை நாளைய தினம் நடைபெறவுள்ள நிலையில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு மனநல மருத்துவர்கள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதன்படி இதுவரை படிக்காத புதிய தகவல்களை நினைவில் வைத்துக் கொள்ள முயல்வதை இந்த நேரத்தில் செய்யக் கூடாது என மாணவர்களிடம் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அமைதியான உடற்பயிற்சி
இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல மருத்துவ சங்கத்தின் தலைவர் பேராசிரியர் மியுரு சந்திரதாச, ஒவ்வொரு நாளும் இரண்டு முதல் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு அமைதியான உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது.
வீட்டைச் சுற்றி நடத்தல், மெல்லிசை பாடல்களை கேட்டல் மற்றும் சில நிமிடங்களுக்கு ஒரு குறுகிய மத நடவடிக்கையில் ஈடுபடுவது போன்ற அமைதியான பயிற்சியை செய்யுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
தயாராக வைத்திருப்பது
புதிய பேனா பென்சில்களை வாங்குவதை விட, பயன்படுத்திய கைக்கடிகாரம், பேனா, பென்சில் ஆகியவற்றை தயாராக வைத்திருப்பது நல்லது என அவர் தெரிவித்துள்ளார்.
