உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கு வெளியான அறிவித்தல்
Sri Lanka
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
By Sumithiran
உயர்தர பரீட்சை 2022
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு (2022 ) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 8ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
விண்ணப்பிக்கும் முறை
பாடசாலை விண்ணப்பதாரர்கள் அதிபர் ஊடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை 1911 என்ற நேரடி தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

