கொரிய மொழி பரீட்சை: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இந்த ஆண்டுக்கான கொரிய மொழி பரீட்சை தொடர்பில் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவிவரும் விண்ணப்பபடிவம் போலியானது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும்,கொரிய அரசாங்கத்தினால் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் போலியான விண்ணப்ப படிவங்களுக்கு தகவல்களை வழங்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உத்தியோகப்பூர்வ அறிவிப்பு
இந்த ஆண்டு கொரிய மொழி பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளங்களில் விண்ணப்பப்படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
மேலும் இந்தமாதம் 26ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை கொரிய மொழி பரீட்சைக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்படும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |