பீ.பீ.சி எழுப்பிய சந்தேகம்!

Sri Lanka LTTE Leader India Liberation Tigers of Tamil Eelam Indian Peace Keeping Force
By Niraj David Feb 17, 2024 02:47 PM GMT
Niraj David

Niraj David

in சமூகம்
Report

இரண்டு நாட்களுக்குள் யாழ் நகரைக் கைப்பற்றிவிடுவோம் என்று கூறி இந்தியப் படையினர் ஆரம்பித்திருந்த  ஒப்பரேஷன் பவான் இராணுவ நடவடிக்கை இரண்டு வாரங்களைக்  கடந்தும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

யாழ் நகரை நெருங்குவதற்கே இந்தியத் துருப்புக்களுக்கு 12 நாட்கள் வரை பிடித்தது. அதற்கும் அவர்கள் கொடுத்த விலை மிகப் பெரியது என்றே கூறப்படுகின்றது.

பலமான உயிர் மற்றும் பொருள் இழப்புக்களைச் சந்தித்தே அவர்களால் யாழ் நகரை ஓரளவிற்கு நெருங்க முடிந்தது. புலிகளின் எதிர்ப்புக்கள் அவர்கள் நினைத்துப் பார்த்ததைவிட மிகவும் கடுமையானதாக இருந்தது.

அவர்கள் எதிர்பாராத இடங்களில் இருந்தெல்லாம் புலிகள் தாக்குதல்களை நடாத்திக்கொண்டிருந்தார்கள். புலிகளின் மன உறுதிக்கும், திறமைகளுக்கும், அர்ப்பணிப்புக்களுக்கும் முன்பு, உலகின் நான்காவது பெரிய இந்திய இராணுவம் தடுமாறிக்கொண்டிருந்தது.

அதுவரை இடம்பெற்ற தமது நேரடியான தாக்குதல்களில் 154 இந்திய இராணுவத்தினரை தாம் கொன்றுவிட்டதாகவும், 21 இந்திய ஜவான்களை உயிருடன் பிடித்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தார்கள்.

நூற்றுக் கணக்கான இந்தியப் படையினரை காயப்படுத்தி யுத்த களத்தில் இருந்து அகற்றியுள்ளதாகவும் புலிகள் தெரிவித்திருந்தார்கள்.

இந்தியப் படையினருக்குச் சொந்தமான 52 எஸ்.எல்.ஆர். துப்பாக்கிகளையும், வௌ;வேறு ரகத்திலான 54 இயந்திரத் துப்பாக்கிகளையும், 4 ரொக்கேட் லோஞ்சர்களையும், ஆயிரக் கணக்கான ரவைகளையும் கைப்பற்றியுள்ளதாக புலிகள் தமது உத்தியோகபூர்வ அறிப்பில் வெளியிட்டிருந்தார்கள்.

இந்திய இராணுவத்தினருக்குச் சொந்தமான ஒரு வாகனம், இந்தியப் படை பயன்படுத்திய -இந்தியச் செஞ்சிலுவைச் சங்கத்திற்குச் சொந்தமான ஒரு ஜீப் வண்டி, ஒரு சிறிய பீரங்கி, ஒரு கவச வாகனம் போன்றனவும் தம்மால் கைப்பற்றப்பட்டதாக புலிகள் மேலும் அறிவித்திருந்தார்கள்.

பீ.பீ.சி எழுப்பிய சந்தேகம்! | Bbc Stand For Jaffna Ltte War India Srilanka Praba

இந்தியப் படையினருக்குச் சொந்தமான 14 யுத்த தாங்கிகளும், 5 வேறு வகை வாகனங்களும் தமது தாக்குதல்களினால் சேதமாக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

புலிகளின் நேரடித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களது தொகையையே புலிகள் வெளியிட்டிருந்தார்கள். ஆனால் யாழ் நகரைக் கைப்பற்றுவதற்கான ஆரம்பச் சண்டைகளில் இந்தியப் படையினர் தரப்பில் 319 பேர் கொல்லப்பட்டதாக இந்தியப் படைத்துறை அதிகாரி ஒருவர் பின்னாளில் தெரிவித்திருந்தார்.

இவர்களில் கேணல் தரத்திலான இரண்டு உயரதிகாரிகள் உட்பட மொத்தம் 43 அதிகாரிகளும் கொல்லப்பட்டிருந்தார்கள். அதிகாரிகள் உட்பட 1039 இந்தியப் படையினர் காயம் அடைந்திருந்தார்கள்.

இந்தியா வெளியிட்ட கொலைப் பட்டியல்

இந்தியப் படையினர் தாம் கொலை செய்த அப்பாவித் தமிழ் மக்களையும் சேர்த்து தாம் 1100 புலிகளைக் கொன்றுவிட்டதாக அறிவித்திருந்தார்கள்.

பீ.பீ.சி எழுப்பிய சந்தேகம்! | Bbc Stand For Jaffna Ltte War India Srilanka Praba

அவர்களைப் பொறுத்தவரையில் இந்தியத் துருப்புக்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் அனைவருமே புலிகளாகவே பட்டியலிட்டிருந்தார்கள்.

167 துப்பாக்கிகளும், 17 உயர் ரகத் துப்பாக்கிகளும், 8 ரொக்கட் லோஞ்சர்களும், 23 இயந்திரத் துப்பாக்கிகளும், 70 மோட்டார்களும் தம்மால் கைப்பற்றப்பட்டதாக இந்தியப் படையினர் சென்னையில் செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

இந்திய அதிபரின் சந்தேகம்

சண்டைகளில் ஏற்பட்ட இழப்புக்கள் பற்றி இந்தியப் படைத்துறை வெளியிட்ட கணக்குகள் தொடர்பாக அக்காலகட்டத்தில் பலத்த சந்தேகம் தெரிவிக்கப்பட்டன.

சிறிலங்கா, இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்கள் இந்தியப் படையினர் தமது இழப்புக்கள் தொடர்பாக வெளியிட்டுவந்த கணக்குகளை நம்பவில்லை. இந்தியாவின் முன்னாள் அதிபர் ஜி. ஜெயில் சிங் , இந்தியப் படையினர் தமது இழப்புக்கள் பற்றி வெளியிட்டு வரும் கணக்குகள் தொடர்பாக இந்தியப் படை உயரதிகாரியாக லெப்.ஜெனரல் திபீந்தர் சிங்கிடம் ஒரு தடவை தனது சந்தேகத்தைத் தெரிவித்திருந்தார்.

இந்திய நாட்டிற்காக யுத்தம் புரியும் வீர அதிகாரிகளுக்கு அதிபரால் வழங்கப்படுகின்ற ‘சிரோமணி விருதைப் பெறுவதற்கு புதுடெல்லி சென்றிருந்த லெப்.ஜெனரல் திபீந்தர் சிங்கிடம், “இலங்கையில் இந்தியப் படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்கள் என்ன? என்று இந்திய அதிபர் வினவினார்.

பீ.பீ.சி எழுப்பிய சந்தேகம்! | Bbc Stand For Jaffna Ltte War India Srilanka Praba

திபீந்தர் சிங் அந்த விபரங்களை அதிபரிடம் வழங்கினார். இந்திய உயரதிகாரி வழங்கியிருந்த இழப்பு விபரங்களை நம்ப மறுத்த இந்திய அதிபர் , “சிறிலங்காவின் அதிபர் ஜெயவர்த்தனா எனக்குத் தந்த தகவல்களின்படி இந்தியப் படையினரின் இழப்புக்கள் நீங்கள் கூறும் கணக்கை விட அதிகமாக இருக்கின்றதே, நான் யாருடைய கணக்கை நம்புவது? உங்களுடையதையா அல்லது சிறிலங்காவின் அதிபர் யினுடையதையா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்தியப் படை அதிகாரி திகைத்துவிட்டார். இந்திய அதிபரிடம் இருந்து அப்படியான ஒரு கேள்வி எழுந்து தன்னை இத்தனை தூரத்திற்கு சங்கடப்படவைக்கும் என்று அவர் எதிர்பார்க்கவேயில்லை.அதிபருடன் இந்தச் சம்பாசனை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அரச மற்றும் இராணுவ அதிகாரிகள் பலர் அருகே இருந்தார்கள்.

இது மேலும் அவரைச் சங்கடப்பட வைத்தது. “இழப்புக்களைச் சந்தித்த இந்தியப் படை வீரர்களுக்கு நாங்களே ஓய்வுதியப் பணம் வழங்கவேண்டும் என்பதால், சிறிலங்கா அதிபருடையதை விட எனது கணக்கை நம்புவதே நல்லது என்று கூறிச் சமாளித்துவிட்டு வந்தார்.

பீ.பீ.சி எழுப்பிய சந்தேகம்

இதேபோன்று, இந்திய இராணுவத்தின் உயரதிகாரி லெப். கேணல் திபீந்தர் சிங்கை ஒரு தடவை பீ.பீ.சி. யின் பிரபல ஊடகவியலாளரான மார்க் ரூலி செவ்வி கண்டுகொண்டிருந்தார்.

யாழ்பாணத்தில் இந்தியப் படையினர் மேற்கொண்டிருந்த வீர சாகாசங்கள் பற்றியெல்லாம் இந்திய அதிகாரி புழுகிக் கொண்டிருந்தார். இந்தியப் படையினருக்கு ஏற்பட்ட இழப்பு பற்றி திபீந்தர் சிங் தெரிவிக்க ஆரம்பித்த போது, அந்த எண்ணிக்கையை ஏற்றுக் கொள்ளத் தாம் தயங்குவதாக அந்த பீ.பீ.சி. ஊடகவியலாளர் தெரிவித்தார்.

பீ.பீ.சி எழுப்பிய சந்தேகம்! | Bbc Stand For Jaffna Ltte War India Srilanka Praba

இராணுவ அதிகாரி தமது தரப்பு இழப்புக்கள் பற்றி தாம் வெளிட்ட தொகை சரியானது என்று தொடர்ந்து வாதாடினார். ஆனால் பீ.பீ.சியின் ஊடகவியலாளர் அதனை கடைசி வரை ஏற்றுக்கொள்ளவேயில்லை.

அந்தச் செவ்வியின் இடைநடுவே பீ.பீ.சி. ஊடகவியலாளர் மார்க் ரூலி அந்தச் செவ்வியை ஒலிப்பதிவு செய்துகொண்டிருந்த உபகரணத்தின் ஒலிவாங்கியை துண்டித்துவிட்டு, ஒரு கேள்வியை திபீந்தர் சிங்கிடம் வினவினார். அதைக்கேட்ட திபீந்தர் சிங் அதிர்ந்து விட்டார். அடுத்து என்ன கூறுவது என்று அவருக்கு தெரியவில்லை.

தொடரும்… 

ஈழ மண்ணில் இந்தியப் படையினர் மேற்கொண்ட படுகொலைகள்

ஈழ மண்ணில் இந்தியப் படையினர் மேற்கொண்ட படுகொலைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024