நாடாளுமன்றத் தேர்தல்: ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு

Election Political Development Current Political Scenario
By Shalini Balachandran Sep 30, 2024 11:30 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நேற்று (30) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இன்று தமிழ் தேசிய களத்தில் தூய்மையான மாற்றத்திற்கான மனிதர்களை மக்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்திற்கு அனுப்ப தமிழ் மக்கள் விரும்புகின்றனர்.

அநுரவின் ஆட்சியில் காத்திருக்கும் அதிரடிகள் : பீதியில் ஊழல் அரசியல்வாதிகள்

அநுரவின் ஆட்சியில் காத்திருக்கும் அதிரடிகள் : பீதியில் ஊழல் அரசியல்வாதிகள்

தமிழ்த் தேசியக்கொள்கை

இளையவர்களும் பெண்களும் நிபுணர்களும் இந்த குழுமத்தில் கணிசமான எண்ணிக்கையில் இருக்க விரும்புகின்றனர். அதேநேரம் தமிழ் தேசிய இனம் தன் உரிமைகளை இன்னும் இத்தீவில் பெற்றுக்கொள்ளாத நிலையில் தியாக வேள்வியை கடந்து இன அழிப்பிற்கு உள்ளாகி பரிகார நீதியையும் நிரந்தர சமஷ்டி அடிப்படையிலான தீர்வையும் கோரி நிற்கின்ற சூழலில் கட்சி அரசியலை தாண்டி தமிழ்த் தேசியக்கொள்கை அரசியல் தளமே முன்னெடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

முதிர்ந்த அரசியல் தலைவர்கள் வழிகாட்ட நிபுணத்துவமும் பல் பரிணாம ஆளுமையும் தமிழ்த் தேசிய பற்றுறுதியும் கொண்ட தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் அணி வடகிழக்கில் களம் காண வேண்டும் என்பது இன்று தமிழர்கள் அனைவரது வேணவாக இருக்கின்றது.

நாடாளுமன்றத் தேர்தல்: ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு | Notification Regarding The Parliamentary Elections

கோட்பாட்டுத் தளத்தில் தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்கள் பொதுச்சபை என்பவற்றின் கருத்தாணைகளை தமிழ்த் தேசிய அரசியல் சித்தாந்தமாக ஏற்றுக் கொண்டு சமகால வாழ்வியல் விடயங்களையும் உள்வாங்கிய தேர்தல் விஞ்ஞாபனத்தை இந்த தமிழ்ப் பொது வேட்பாளர்கள் அணியினர் கொண்டிருப்பர்.

இதற்கான வடகிழக்கு தழுவிய தூய தமிழ்த் தேசிய முகங்களை தொகுதி வாரியாக அனைத்து சமத்துவ பிரதிபலிப்புக்களுடன் கண்டறிய உதவுமாறு தமிழர் சம உரிமை இயக்கம் அனைத்து தமிழ் மக்களிற்கும் அறைகூவல் விடுகின்றது.

உயரடுக்கு பாதுகாப்பு நீக்கம்: மைத்திரி வெளியிட்ட அறிவிப்பு

உயரடுக்கு பாதுகாப்பு நீக்கம்: மைத்திரி வெளியிட்ட அறிவிப்பு

அரசியல் இயக்கங்கள்

அனைத்து சிவில் சமுக பிரதிநிதிகள், பல்கலைகழக சமூகம், மாதர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், அரசியல் இயக்கங்கள் இதில் தங்கள் பங்களிப்பை இதயசுத்தியுடன் ஆற்ற முன்வருமாறு வேண்டுகின்றோம்

பொது தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் அடுத்த வாரம் எதிர்நோக்கி இருக்கின்ற இந்த தருணத்தில் வடகிழக்கின் திருமலை, மட்டு, யாழ், வன்னி, அம்பாறை தேர்தல் மாவட்டங்களை சார்ந்த ஊழலற்ற மது போதை வணிகங்களுடன் சமுக பிறழ்வு நடத்தைகளுடன் எவ்விதத்திலும் தொடர்புபடாத தமிழ் தேசியத்திலும் தமிழ் மக்கள் வாழ்வியல் மேம்பாட்டிலும் பற்றுதியான கறைபடியாத மாற்றத்திற்கான தூய தமிழை தேசிய முகங்களை பரிந்துரை செய்யுமாறு வேண்டுகின்றோம்.

நாடாளுமன்றத் தேர்தல்: ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு | Notification Regarding The Parliamentary Elections

அவர்கள் மக்கள் மன்றில் வெளிப்படுத்தப்பட்டு தமிழ் சிவில் கட்டமைப்புக்களின் ஒப்புதலுடன் பட்டியல் இறுதியாக்கப்படும்

அவர்கள் தமிழ் தேசிய நலனை முன்னிறுத்தும் பொது வேட்பாளர்களாக நாடாளுமன்ற தமிழ் மக்கள் பிரதிநித்த்துவத்திற்கான தேர்தலை எதிர் கொள்வர்.

கட்சி அரசியலைக் கடந்த இந்த திட்ட முன்மொழிவிற்கு அனைத்து தமிழர்களது ஆதரவையும் பங்குபற்றுதலையும் வேண்டி நிற்கின்றோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்பட வேண்டும் : முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்பட வேண்டும் : முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGallery
ReeCha
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

05 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017