கொரோனா ,குரங்கு அம்மையை அடுத்து பரவும் தக்காளி காய்ச்சல்
மீண்டும் கொரோனா
உலகளாவிய ரீதியில் கொரோனா பெருந்தொற்று மக்களை ஆட்டிப்படைத்து ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் அது பரவத் தொடங்கியிருப்பது மக்களை மேலும் அச்சத்திற்குள்ளாக்கி உள்ளது.
அத்துடன் கொரோனாவைத் தொடர்ந்து குரங்கு அம்மை என்ற நோய் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் தற்போது தக்காளி காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
தக்காளி காய்ச்சல்
இந்தியாவில் இதுவரை 52 பேருக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பாக கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் என்ற பகுதியில் 5 வயது குழந்தைக்கு தக்காளி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியபோது தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்த கேரள எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
தமிழகத்தில் இதுவரை தக்காளி காய்ச்சல் பரவவில்லை என்றாலும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

