ஆளுநர் உத்தரவாதம் - இ.போ.ச இணக்கம் : கைவிடப்பட்டது சேவை முடக்கல் போராட்டம்!

Northern Province of Sri Lanka Srilanka Bus Nagalingam Vedanayagam
By Sathangani Jun 30, 2025 06:08 AM GMT
Report

வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தினர் நாளை (01) செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கவிருந்த சேவை முடக்கல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சிவபரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை நிறுத்துவதற்கு இ.போ.ச துறைசார் தரப்பினர் உறுதி வழங்கியதன் அடிப்படையில் இந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து அவர் மேலும் தெவிக்கையில், ”இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கண்டித்தும், அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தி தனியார் பேருந்துகளின் பாதுகாப்பான சேவையை உறுதி செய்வதற்காகவும் நாளையதினம்  வடக்கில் சேவை முடக்கல் போராட்டம் இடம்பெறும் என கடந்தவாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஷிரந்தி விரைவில் கைது - மகாநாயக்கர்  தேரரிடம் சரணடைந்த மகிந்த

ஷிரந்தி விரைவில் கைது - மகாநாயக்கர்  தேரரிடம் சரணடைந்த மகிந்த

கைவிடப்படும் போராட்டம் 

இனிவரும் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதென்று இ.போ.சபை, வடக்கு ஆளுநர் மற்றும் துறைசார் தரப்பினர் தற்போது வழங்கிய உத்தரவாதத்துக்கு அமைய குறித்த போராடம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

ஆளுநர் உத்தரவாதம் - இ.போ.ச இணக்கம் : கைவிடப்பட்டது சேவை முடக்கல் போராட்டம்! | Np Private Bus Service Strike Canceled Sltb Amity

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற கால அட்டவணைக்கு முரணான சேவை ஒன்றால் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் இ.போ.ச தரப்பினரிடையே குழப்ப நிலை  ஏற்பட்டிருந்தது. இதையடுத்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு நிலைமை சுமுகமாக்கப்பட்டது.

ஆனாலும் இச்சட்டவிரோதம் குறித்து துறைசார் தரப்பினருக்கும் போக்குவரத்து அதிகார சபை, துறைசார் அமைச்சு, வடக்கின் ஆளுநர் ஆகியோரிடம் முறையிட்டிருந்ததுடன், காவல் நிலையத்திலும் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டது.

காவல்துறை பொறுப்பதிகாரிகளுக்கு அதிரடி இடமாற்றம்

காவல்துறை பொறுப்பதிகாரிகளுக்கு அதிரடி இடமாற்றம்

இலங்கை போக்குவரத்து சபை உறுதி

ஆனாலும் எந்தவொரு தீர்வுக் கிடைக்காமல் போராட்டம் முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் ஆளுநர், இ.போ.சபை, காவல்துறையினர் இவ்விடயம் தொடர்பில் முன்னெடுத்த நடவடிக்கை காரணமாக இ.போ.ச சட்டவிரோத சேவையை இடைநிறுத்தியுள்ளது.

ஆளுநர் உத்தரவாதம் - இ.போ.ச இணக்கம் : கைவிடப்பட்டது சேவை முடக்கல் போராட்டம்! | Np Private Bus Service Strike Canceled Sltb Amity

அத்துடன் இணைந்த சேவை தொடர்பிலும் வரவுள்ள நாட்களில் இரு தரப்பினருடனும் கலந்து பேசி தீர்வை காண முயற்சிப்பதாகவும் எமக்கு உறுதி தந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் மக்களின் இயல்பு நிலையை சீர் குலைப்பதை தவிர்க்கும் வகையில் சேவை முடக்கல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். 

ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வட கிழக்கு: அரசை எச்சரிக்கும் தேரர்

ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வட கிழக்கு: அரசை எச்சரிக்கும் தேரர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025