கோர விபத்தில் பலியான ஆளுங்கட்சி வேட்பாளர்
ஓய்வுபெற்ற பிரிகேடியரும் தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளருமான ஒருவர் கோர விபத்தொன்றில் பலியாகியுள்ளார்.
குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிள், தனியார் பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த கோர விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் பன்னிப்பிட்டிய - மக்கும்புர பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற பிரிகேடியர் எச்.எம். சரத் விஜேசேன என்ற 63 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என கூறப்படுகிறது.
விபத்து சம்பவம்
இதேவேளை, இந்த விபத்தில் அவருடன் பயணித்த ஓய்வுபெற்ற கேணல் ஒருவரும் படுகாயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பிரிகேடியர் மற்றும் காயமடைந்த கேணல், வணிக நோக்கத்திற்காக பண்டாரகம-கெஸ்பேவ வீதியில் காலிக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து வெல்மில்லவில் உள்ள கல்கடே சந்திப்பில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
பேருந்தில் மோதிய மோட்டார் சைக்கிள் 100 மீட்டருக்கும் அதிகமான தூரம் இழுத்துச் செல்லப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், விபத்து தொடர்பாக அங்கலவத்தையைச் சேர்ந்த 42 வயதுடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து பண்டாரகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |