கிராம சேவகரிடம் பட்டியல் கொடுத்த தேசிய மக்கள் சக்தியினர் : மானிப்பாய் பிரதேச சபையில் அமளி துமளி!

Jaffna Floods In Sri Lanka National People's Power - NPP
By Kajinthan Dec 17, 2025 02:40 PM GMT
Report

மானிப்பாய் பிரதேச சபையின் பாதீட்டு அமர்வானது இன்றையதினம்(17) தவிசாளர் ஜெசீதன் தலைமையில் ஆரம்பமானது. பாதீடு மீதான கருத்துக்களின்போது தேசிய மக்கள் சக்தியினர், தவிசாளர் பக்கச்சார்பாக செயற்படுவதாகவும், வேறு பல குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தனர்.

அதன்பின்னர் 14 மேலதிக வாக்குகளால் பாதீடானது நிறைவேற்றப்பட்டது. பின்னர் சபையின் உறுப்பினர்கள் ஒருவரையொருவர் குற்றம்சாட்டியதால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

உத்தியோகத்தர்கள் சீராக செயற்படவில்லை

அனர்த்தம் காரணமாக மக்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரண பணிகளுக்கான பதிவுகளின்போது உத்தியோகத்தர்கள் சீராக செயற்படவில்லை என உறுப்பினர்களான உஷாந்தன் மற்றும் ரமணன் ஆகியோர் குற்றம்சாட்டினர்.

கிராம சேவகரிடம் பட்டியல் கொடுத்த தேசிய மக்கள் சக்தியினர் : மானிப்பாய் பிரதேச சபையில் அமளி துமளி! | Npp List Riot In Manipay Pradeshiya Sabha

இதன்போது குறுக்கிட்ட தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் ஒருவர், அரசாங்க அதிகாரிகள் இவ்வாறு தவறுகள், ஊழல்கள் செய்வது தமக்கு தெரிகிறது என்றும், மக்களுக்கு சேரவேண்டிய நிதி சேரவேண்டும் என்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

 இதன்போது குறுக்கிட்ட உறுப்பினர் ரமணன், அநுரவை ஒரு சிங்கம் என்றும், தாங்கள் சிங்கத்தின் பிள்ளைகள் என்றும் இவர்கள் தங்களை தாங்கள் நினைக்கின்றனர். உங்களுடைய என்.பி.பி கட்சியினர்தான் கிராம சேவகரிடம் தனியாக பட்டியல் கொடுத்தனர். அதற்கான ஆதாரம் எங்களிடம் இருக்கிறது என்றார்.

ஏன் இப்படி ஏமாற்றுகின்றீர்கள்

இதன்போது குறுக்கிட்ட உறுப்பினர் உஷாந்தன், கட்டுடையில் ஒரு இடைத்தங்கல் முகாம் இருந்தது. முதல்நாள் நான் அங்கே சென்று அங்குள்ள மக்களுக்கு நுளம்புவலை மற்றும் ஏனைய பொருட்கள் கொடுத்துவிட்டு வருகிறேன், அடுத்தநாள் உங்களது அமைப்பாளர் (தேசிய மக்கள் சக்தி) போய் கேட்கின்றாராம் எல்லாம் கிடைத்ததா என்று. ஏன் இப்படி ஏமாற்றுகின்றீர்கள்?

கிராம சேவகரிடம் பட்டியல் கொடுத்த தேசிய மக்கள் சக்தியினர் : மானிப்பாய் பிரதேச சபையில் அமளி துமளி! | Npp List Riot In Manipay Pradeshiya Sabha

மக்களுக்கான காசை கொடுப்பதற்கு வக்கில்லை, சரியான பதிவுகளை எடுப்பதற்கு வக்கில்லை, வீட்டில் வைத்து பதிவுகளை செய்துவிட்டு கொண்டுவந்து கொடுக்கின்றீர்கள் என குற்றம்சாட்டினார்.

சபையில் குழப்பம் ஏற்பட்டு அமைதியின்மை

இந்த சந்தர்ப்பத்தில் ஏனைய உறுப்பினர்கள் சிலரும் எழுந்து சத்தமாகவும், ஆவேசமாகவும் கருத்துக்களை முன்வைத்தவேளை சபையில் குழப்பம் ஏற்பட்டு அமைதியின்மை ஏற்பட்டது.

கிராம சேவகரிடம் பட்டியல் கொடுத்த தேசிய மக்கள் சக்தியினர் : மானிப்பாய் பிரதேச சபையில் அமளி துமளி! | Npp List Riot In Manipay Pradeshiya Sabha

 கடுமையான முயற்சியின் பின்னர் தவிசாளர் சபையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். இருப்பினும் தான் ஒரு பெண் உறுப்பினராக இருந்தும், தான் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை என தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் தவிசாளர் மீது குற்றச்சாட்டு முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

இலங்கையில் மொசாட் அமைத்த தளம் : இஸ்ரேல் ஆயுதங்களை வழங்க யாது காரணம்…!

இலங்கையில் மொசாட் அமைத்த தளம் : இஸ்ரேல் ஆயுதங்களை வழங்க யாது காரணம்…!

நாமலுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்

நாமலுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025