கறுப்பு ஜூலை ஆவணப்படம்..! மரிக்கரை சபையில் சாடிய நாடாளுமன்ற உறுப்பினர்
கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தையும் பொதுமக்களையும் தவறான பிம்பத்தைப் பயன்படுத்தி தவறாக வழிநடத்தியதற்காக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கரை தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண (Jagath Manuwarna) கடுமையாக சாடியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே எம்.பி ஜகத் மனுவர்ண இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை கலவரம் குறித்த ஆவணப்படத்தின் போது இலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் காட்டியதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரசியல் முரட்டுத்தனத்தை நிரூபிக்கிறது
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், முன்னாள் ஊடகவியலாளரான இந்த எம்.பி., கலவரத்தின் போது ஜனதா விமுக்தி பெரமுனவின் தலைவர் என்று கூறி இந்தப் படத்தைக் காட்டியுள்ளார்.
ஒரு மதிப்புமிக்க ஊடக நிறுவனத்தில் ஊடகவியராளராக பணியாற்றிய ஒருவர் உண்மைச் சரிபார்ப்பை மேற்கொள்ளத் தவறியது வருத்தமளிக்கிறது என எம்.பி. மனுவர்ண குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி எம்.பி., படம் தொடர்பாக தற்செயலாக தவறு செய்திருந்தால், அதை மன்னிக்கலாம், ஆனால் அது வேண்டுமென்றே செய்யப்பட்டிருந்தால், அது அவரது அரசியல் முரட்டுத்தனத்தை நிரூபிக்கிறது என்று எம்.பி. மனுவர்ணா தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் அத்தகைய அரசியல் நடைமுறையை அனுமதிக்காது என்று கூறிய NPP நாடாளுமன்ற உறுப்பினர், கறுப்பு ஜூலை கலவரத்திற்கு JVP மீது பழி சுமத்த எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் முயற்சிகளை கண்டிப்பதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்