தேசிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த ஒருவர் உயிரிழப்பு..!
Colombo
Anura Kumara Dissanayaka
SL Protest
By Dharu
தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நேற்றைய(26) தினம் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட எதிர்ப்பு நிலைமையை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நிவித்திகல பிரதேச சபைக்கான வேட்பாளராக களமிறங்கியிருந்த நிமல் அமரசிறி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகம்
தேர்தலைப் பிற்போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று(26) பிற்பகல் தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக காவல்துறையினரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது காயமடைந்த 28 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 12 மணி நேரம் முன்

ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்