விமல் மற்றும் கம்மன்பிலவுக்கு அரசாங்க தரப்பு விடுத்த எச்சரிக்கை
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற அரசியல்வாதிகள் தொடர்ந்து முட்டாள்தனமாகப் பேசினால், விசாரணைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் அரசாங்க தரப்பிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இன்று(06) பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
"விமல் வீரவங்ச, கம்மன்பில மற்றும் எதிர்க்கட்சிக் குழு இது முந்தைய அரசாங்கங்களைப் போலவே இருப்பதாக நினைக்கிறார்கள். அவர்களால் இனி முட்டாள்தனமாகப் பேச முடியாது.
ஆதாரங்களுடன் விசாரணை
அவர்கள் முட்டாள்தனமாகப் பேசினால், அவர்களின் அறிக்கைகள் தொடர்பான விசாரணைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்," என்று அவர் கூறியுள்ளார்.
விமல் வீரவங்சவை வாக்குமூலம் பதிவு செய்ய அழைக்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது பிரிதி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
"கம்மன்பில நீண்ட காலமாக முட்டாள்தனமாகப் பேசி வருகிறார். விமல் வீரவங்ச முட்டாள்தனமாகப் பேசி வருகிறார்.
இதுபோன்ற முட்டாள்தனமாகப் பேசும் அனைத்து அரசியல்வாதிகளையும் ஆதாரங்களுடன் விசாரணைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு நாம் கூற வேண்டும்," என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
