குறைந்த வருமானம் பெறுவோருக்கான கொடுப்பனவு - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கை கடந்த 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் பாதியாகக் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்கும் அஸ்வெசும நிவாரணத்தை நீக்குமாறு உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆலோசனைகளுக்கு அமைய இது மேற்கொள்ளப்பட்டதா என எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, கடந்த 2023 ஆம் ஆண்டில் அஸ்வெசும வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும், அந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் போதே அதில் மீள் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் எனச் சட்டத்தின் ஊடாகவே அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
முதலாம் மற்றும் இரண்டாம் கட்டம்
இதற்கமைய, முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களில் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் தற்போது உறுதிப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர், அதனை இம்மாதத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்த வேலைத்திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட போது 1,773,445 பயனாளிகள் இருந்ததாகவும், எனினும் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆகும் போது அது 1,761,116 ஆகப் பதிவாகியிருந்ததாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், கடந்த 2025 ஆம் ஆண்டில் பயனாளிகளின் எண்ணிக்கை 2,439,917 ஆகப் பதிவாகியிருந்த போதிலும், இவ்வருடம் ஒகஸ்ட் மாதம் ஆகும் போது பயனாளிகளின் எண்ணிக்கை 1,251,522 ஆகக் குறைந்துள்ளதாகவும், இதற்குப் பல காரணிகள் செல்வாக்குச் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அஸ்வெசும கொடுப்பனவு
அதற்கமைய, அதிவறிய, வறிய, பாதிப்படையக்கூடிய மற்றும் இடைக்கால ஆகிய 4 பிரிவுகளின் கீழ் அஸ்வெசும நன்மைகள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்த அமைச்சர், இடைக்காலப் பிரிவினருக்காகச் செய்யப்பட்ட கொடுப்பனவுகள் கடந்த டிசம்பர் மாதத்திலும், பாதிப்படையக்கூடிய பிரிவினருக்கான கொடுப்பனவுகள் கடந்த ஜூன் மாதத்திலும் நிறைவடைந்ததாகக் குறிப்பிட்டார்.

இதற்கமைய, தற்போது அதிக வறிய மற்றும் வறிய ஆகிய இரண்டு பிரிவுகளுக்கு மாத்திரம் அஸ்வெசும கொடுப்பனவுகளைச் செலுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர், அதற்கு மத்தியில் மீள் ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26