ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ள திட்டம் : யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள அலுவலகங்கள்
இலங்கையில் நிலுவையில் உள்ள 650,000 வாகன இலக்கத் தகடுகள் மற்றும் 450,000 சாரதி அனுமதிப்பத்திரங்களை அடுத்த ஆறு மாதங்களுக்குள் வழங்கி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக, மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ தெரிவித்தார்.
சேவை வழங்கலை மேம்படுத்தும் நோக்கில், ஐந்து மாவட்டங்களில் மோட்டார் சைக்கிள் பதிவு நிலையங்களை நிறுவ மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் அலுவலகங்கள்
இதன் முதலாவது நிலையம் கம்பகாவில் திறக்கப்பட்டுள்ளது; குருநாகல், அனுராதபுரம், அம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலும் இத்தகைய நிலையங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வாகனப் பதிவுச் சேவையானது, பிற்காலத்தில் ஏனைய வாகன வகைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று பெர்னாண்டோ குறிப்பிட்டார். மேலும், வாகன இலக்கத் தகடுகளின் தரநிலைகள் குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |