போதைபொருளுடன் கைதான அதிபருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு
அநுராதபுரத்தில் போதை பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இதனடிப்படையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பு
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் கடந்த நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி அநுராதபுரம் எப்பாவல பிரதேசத்தில் உள்ள ஒரு ஆரம்பப் பாடசாலையின் அதிபர், ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில், எப்பாவல நல்லமுதாவ வீதிப் பகுதியில் கைது செய்யப்பட்ட 30 வயதுடைய நபர் ஒருவரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் அநுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
போதைப்பொருள்
இதன்போது, குறித்த அதிபருக்குச் சொந்தமானது என தெரிவிக்கப்படும் எப்பாவல எதகல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றின் பின்னால் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு கிலோ 185 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

அத்தோடு, குறித்த அதிபர் அருகில் உள்ள குளத்தில் போட்டுச் சென்ற போதைப்பொருளை அளக்கப் பயன்படுத்தப்படும் மின்னணுத் தராசு மற்றும் பொலித்தீன் சீலர் இயந்திரம் ஒன்றையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
அத்தோடு, குறித்த அதிபரின் மகனும் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் 25 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதச் செயல்
இதையடுத்து, சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டமை காரணமாக கைது செய்யப்பட்ட அதிபரை அவரது பதவியில் இருந்து இடைநிறுத்தம் செய்ய வட மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தீர்மானித்திருந்தார்.
இதற்கு மேலதிகமாக கைது செய்யப்பட்ட அதிபரின் மனைவி தேசிய மக்கள் சக்தியின் (NPP) பேலியகொட நகர சபையின் உறுப்பினராக இருப்பது பின்னர் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், கணவர் மற்றும் மகன் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் சிக்கியதன் காரணமாக அவர் பதவி விலகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நான் அவர்களை விரும்புகிறேன் என்பதல்ல ஆனால் நான் அதை ஒரு வணிகமாகவே பார்க்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |