விசேட வைத்தியரை மிரட்டி லட்சக்கணக்கில் கப்பம்! அதிரடியாக கைது செய்யப்பட்ட செவிலியர்
கண்டியில் உள்ள முன்னணி மருத்துவ மையம் ஒன்றில் பணியாற்றிய முன்னாள் செவிலியர் ஒருவரும், அவரது கணவரும் தனியார் மருத்துவச் சேவையில் ஈடுபடும் விசேட வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தி கப்பம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் சம்பந்தப்பட்ட வைத்தியரிடம் சுமார் 60 இலட்சத்திற்கும் (6 மில்லியன்) அதிகமான ரூபாயைக் கப்பமாகப் பெற்ற குற்றச்சாட்டில் தெல்தெனிய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 24 வயதுடைய இந்த செவிலியருக்கும், விசேட வைத்தியருக்கும் இடையே நிலவியதாகக் கூறப்படும் நெருக்கமான உறவு குறித்த புகைப்படங்கள் தங்களிடம் இருப்பதாகக் கூறி, செவிலியரின் கணவருடன் இணைந்து அவர்கள் இருவரும் அந்த வைத்தியரை அச்சுறுத்தி, அவ்வப்போது இந்த கப்பப் பணத்தைப் பெற்றுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது நடவடிக்கை
சந்தேகநபரான செவிலியர் தனது பணியில் இருந்து ஓய்வு பெற்று, திருமணம் செய்து கொண்டதன் பின்னர் மெதமஹநுவர பகுதியில் குடியேறியுள்ளார்.

அதன் பின்னரே தம்பதியினர் இருவரும் இணைந்து விசேட வைத்தியரை அச்சுறுத்தி, அவ்வப்போது இந்த பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுள்ளனர்.
தொடர்ச்சியான இந்த மிரட்டல்களை அடுத்து, பாதிக்கப்பட்ட விசேட வைத்தியர் இது குறித்து தெல்தெனிய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |