வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரவிற்கு எதிராக SLC எடுக்கவுள்ள தீர்மானம்!

Donald Trump United States of America Iran Middle East World
By Shalini Balachandran Apr 09, 2026 09:36 AM GMT
Report

வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார தாக்கல் செய்த ஐபிஎல் (ஐபிஎல்) தொடருக்கான தடை தொடர்பிலான மனுவுக்கு எதிராகத் தமது ஆட்சேபனையை முன்வைக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

2026 இந்தியன் பிரீமியர் லீக் மற்றும் பிற வெளிநாட்டு லீக் தொடர்களில் பங்கேற்பதற்கான தடை இல்லாச் சான்றிதழை (NOC) வழங்குமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு (SLC) உத்தரவிடக் கோரி வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது துஷாரவின் கோரிக்கைக்கு எதிராகத் தங்களது ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய உள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தயார் நிலையில் அமெரிக்க படைகள்...! போர் நிறுத்தத்திற்கு மத்தியில் ஈரானுக்கு ட்ரம்பின் கடும் எச்சரிக்கை

தயார் நிலையில் அமெரிக்க படைகள்...! போர் நிறுத்தத்திற்கு மத்தியில் ஈரானுக்கு ட்ரம்பின் கடும் எச்சரிக்கை

முக்கிய அதிகாரிகள் 

இதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 23 ஆம் திகதிக்குள் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனுவில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா, செயலாளர் பந்துல திஸாநாயக்க உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பிரதிநிதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரவிற்கு எதிராக SLC எடுக்கவுள்ள தீர்மானம்! | Nuwan Thushara Rcb Ipl 2026 Noc Legal Dispute

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் தடையின்றி ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள துஷார, 2026 ஆம் ஆண்டு தொடருக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இருப்பினும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட உடற்தகுதித் தரநிலைகளை அவர் பூர்த்தி செய்யவில்லை எனத் தெரிவித்து 2026 ஆம் ஆண்டுக்கான NOC வழங்க கிரிக்கெட் சபை மறுப்புத் தெரிவித்துள்ளது.

யாழில் இருந்து புறப்பட்டது அன்னை பூபதி நினைவு ஊர்தி

யாழில் இருந்து புறப்பட்டது அன்னை பூபதி நினைவு ஊர்தி

வருமான இழப்பு 

தனது தரப்புக்களை முன்வைத்துள்ள துஷார, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடனான தனது ஒப்பந்தம் கடந்த மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டதாகவும் தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தான் இனி தேசிய அணிக்குத் தெரிவு செய்யப்பட மாட்டேன் எனத் தெரிந்திருந்தும், உடற்தகுதியைக் காரணம் காட்டித் தடையுத்தரவு பிறப்பிப்பது நியாயமற்றது என அவர் வாதிட்டுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரவிற்கு எதிராக SLC எடுக்கவுள்ள தீர்மானம்! | Nuwan Thushara Rcb Ipl 2026 Noc Legal Dispute

அத்தோடு, கடந்த காலங்களில் இதே உடற்தகுதியுடன் தனக்கு NOC வழங்கப்பட்டதையும் அவர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த காலப்பகுதிக்குள் NOC வழங்கப்படாவிட்டால் ஐபிஎல் அணி தன்னை நீக்கிவிடும் என்றும் இதனால் தனக்குப் பாரிய வருமான இழப்பு எதிர்கால வாய்ப்புகளில் பாதிப்பு ஏற்படும் எனத் துஷார கவலை வெளியிட்டுள்ளார்.

தனக்கு NOC வழங்கப்பட வேண்டும் என்ற இடைக்கால மற்றும் நிரந்தர தடையுத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என அவர் கோரியுள்ள நிலையில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள விசாரணை இந்த விவகாரத்தில் தீர்க்கமான ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் அதிகரிக்கும் தாக்குதல்: ஐநா பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

மீண்டும் அதிகரிக்கும் தாக்குதல்: ஐநா பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026