சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும் இலங்கையின் முக்கிய பிரதேசம்
கிறிஸ்மஸ் (christmas) விடுமுறையை அடுத்து நுவரெலியாவிற்கு (nuwara eliya) அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக,நுவரெலியா சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவ்வாறான சுற்றுலாப் பயணிகளால் நுவரெலியா பிரதேசத்தில் உள்ள அனைத்து சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் தங்கும் வசதிகளும் முன்பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நுவரெலியாவில் புத்தாண்டை வரவேற்கப்போகும் சுற்றுலா பயணிகள்
இந்த நாட்களில் நுவரெலியாவில் நல்ல காலநிலையுடன் வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவைச் சுற்றியுள்ள விக்டோரியா பூங்கா, ஹோர்டோன்தன்ன, சதாதன்ன, கிரிகோரி ஏரி, ஹக்கல தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளை கவரும் இடங்களை பார்வையிட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
வந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் சிலர் வரவிருக்கும் புத்தாண்டை நுவரெலியாவில் கழிப்பதற்காக அறைகளை முன்பதிவு செய்துள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
images -ada
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |