கோடாரியால் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் - நுவரெலியாவில் கோரம் (படங்கள்)

Sri Lanka Police Nuwara Eliya Sri Lanka Police Investigation
By Vanan Jun 26, 2022 10:09 AM GMT
Report

நுவரெலியா காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட சாந்திபுர ஒலிபண்ட் மேல் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர், கணவரால் கோடாரியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு(25) 10.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நுவரெலியா காவல் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் ஒன்றரை வயது மற்றும் மூன்றரை வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளின் தாயான சுப்பிரமணியம் சத்தியவாணி (வயது - 24) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இளம் தாய் ஒருவர் கோடாரியால் தாக்கி கொலை

கோடாரியால் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் - நுவரெலியாவில் கோரம் (படங்கள்) | Nuwara Eliya Murder Sri Lanka Death Today

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

உயிரிழந்த இளம் பெண்ணின் கணவர் தோட்டத்தில் தொழில் செய்து வருவதுடன், பகுதி நேர வருமானத்திற்கு நுவரெலியா நகரில் முச்சக்கரவண்டி சாரதியாகவும் பணியாற்றி வருகின்றார்.

சம்பவ தினமான நேற்று (25) சனிக்கிழமை இரவு தனது தொழிலை முடித்து விட்டு வீடு திரும்பிய கணவருக்கும் மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஆத்திரமடைந்த கணவன், கோடரியால் மனைவியின் தலையில் தாக்கியுள்ளார். சம்பவ இடத்திலேயே மனைவி உயிரிழந்ததுடன், கணவன் தனது இளைய மகளைத் தூக்கிக் கொண்டு, இரவோடு இரவாக நுவரெலியா காவல் நிலையத்தில் சென்று, சரணடைந்துள்ளார்.

சந்தேக நபர் காவல் நிலையத்தில் சரணடைவு

கோடாரியால் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் - நுவரெலியாவில் கோரம் (படங்கள்) | Nuwara Eliya Murder Sri Lanka Death Today

சம்பவ இடத்திற்கு இன்று (26) காலை நுவரெலியா மாவட்ட நீதவான் விஜயம் செய்து மரண விசாரணை நடத்தியுள்ளார்.

நீதவானின் உத்தரவுக்கு அமைய, சடலம் சட்ட வைத்தியர் ஒருவரின் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி