108 ஓட்டங்களுக்குள் சுருண்டது நியூசிலாந்து - ஆதிக்கம் செலுத்தும் இந்தியா
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழட்சியை வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
3 போட்டிகளைக் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதன் மூலம் 1-0 என்கிற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
இன்றய இரண்டாவது போட்டியானது ராய்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.
108 ஓட்டங்கள்
Innings Break!
— BCCI (@BCCI) January 21, 2023
A brilliant bowling performance from #TeamIndia 👏 👏
3⃣ wickets for @MdShami11
2⃣ wickets each for @hardikpandya7 & @Sundarwashi5
1⃣ wicket each for @mdsirajofficial, @imkuldeep18 & @imShard
Scorecard ▶️ https://t.co/tdhWDoSwrZ #INDvNZ | @mastercardindia pic.twitter.com/0NHFrDbIQT
முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி ஆரம்ப முதலே ஆட்டமிழப்புகளை சந்தித்து ஏமாற்றதை அளித்தது.
நியூசிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக கிளைன் பிலிப்ஸ் 36 ஓட்டங்களையும் மிட்ச்சில் சென்டர் 27 ஓட்டங்களையும் மைக்கல் பிரேஸ்வெல் 22 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
முதல் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 33.4 ஓவர் நிறைவில் 108 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது.
இந்திய அணி சார்பாக மொகமட் சாமி 3 ஆட்டமிழப்புகளையும் ஹர்திக் பாண்டிய 2 ஆட்டமிழப்புகளையும் அதிகபட்சமாக கைப்பற்றியிருந்தனர்