நாளைய போட்டியில் விளையாட மறுப்புதெரிவித்த இலங்கை வீரர்!
நியூஸிலாந்துடனான ஒருநாள் மற்றும் 20/20 தொடருக்கு தாம் நன்கு தயாராக இருப்பதாக இலங்கை அணியின் தலைவர் தசுன் சானக தெரிவித்துள்ளார்.
இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் முதலாவது ஒருநாள் சர்வதேச துடுப்பாட்ட போட்டி நாளை (25) ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியில் தனஞ்சய டி சில்வா 7 ஆவதாக களம் இறங்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலந்து கொள்ளவது கேள்விக்குறி
இதேவேளை, தனஞ்சய டி சில்வா அதனை தொடர்ந்து வரும் இரு போட்டிகளிலும் கலந்து கொள்ளவது கேள்விக்குறி எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்த போட்டி குறித்து தசுன் சானக கருத்து தெரிவிக்கையில்,
"நாங்கள் போட்டிக்கு நன்கு தயாராக உள்ளோம். எஞ்சலோ மெத்யூஸ் அணியில் இணைந்தது நல்ல விடயம். இளம் வீரர்கள் அவரிடமிருந்து அறிவைப் பெற முடியும். உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற இந்த போட்டியில் வெற்றி பெறுவது முக்கியம்.
100 வது ஒருநாள் போட்டி
நியூஸிலாந்து அணி சிறப்பாக உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற நாம் கடினமாக உழைக்க வேண்டும்." என தெரிவித்தார்.
இலங்கை அணி மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற வேண்டுமானால், நியூசிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற வேண்டும்.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நாளைய போட்டி இரு நாடுகளுக்கும் இடையிலான 100 வது ஒருநாள் போட்டியாக அமையவுள்ளமையும் விசேட அம்சமாகும்.
The story circulating in social media saying that I have refused to bat at No. 7 during tomorrow's game is false, and I wish to state that I am a player who always stands with the team.
— Dhananjaya De Silva (@dds75official) March 24, 2023
இந்நிலையில் நாளை நியூஸிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் துடுப்பாட்ட போட்டியில் தாம் 7ஆவது வீரராக துடுப்பாட மறுப்பு தெரிவித்ததாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என இலங்கை துடுப்பாட்ட அணியின் வீரர் தனஞ்சய டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை கிரிக்கெட் அணிக்காக எந்தவொரு நிலையிலும், எந்தவொரு இடத்திலும் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த தான் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

