எதுவுமே செய்யாத ஒபாமாவிற்கு ஏன் நோபல் பரிசு..! ட்ரம்பின் பேச்சால் சர்ச்சை
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா எதுவும் செய்ததில்லை எனவும், அவருக்கு ஏன் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது என தனக்குத் தெரியவில்லை எனவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுலா நாட்டில் உள்ள எண்ணெய் வளங்கள் குறித்து எண்ணெய் மற்றும் வாயு நிறுவன அதிகாரிகளுடன், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளிக்கிழமை (ஜன. 9) வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
மக்களுக்கு என்னை பிடிக்குமோ தெரியாது
“மக்களுக்கு ட்ரம்பை பிடிக்குமோ அல்லது பிடிக்காதோ எனக்குத் தெரியாது. ஆனால், நான் 8 பெரிய போர்களை நிறுத்தியுள்ளேன். இதில், சில போர்கள் 25 மற்றும் 36 ஆண்டுகளாக நடைபெற்று வந்தவை.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல்கள் போராக உருமாறத் தொடங்கியிருந்தன. ஏற்கெனவே, 8 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தன.
என்னை விட அந்த விருதுக்கு தகுதியானவர்கள் வேறு யாருமில்லை
நீங்கள் நிறுத்தக்கூடிய ஒவ்வொரு போருக்கும் ஒரு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும். வரலாற்றில் என்னை விட அந்த விருதுக்கு தகுதியானவர்கள் வேறு யாருமில்லை.” எனக் கூறியுள்ளார்.

அத்துடன், கடந்த 2025 ஆம் ஆண்டு வோஷிங்டன் வந்திருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் அணுசக்தி பலமுடைய இரண்டு அண்டை நாடுகளுக்கும் இடையிலான போரை நிறுத்தி லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதற்குத் தனக்கு நன்றி கூறியதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |