சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவனுக்கு நேர்ந்த அவலம்!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Death
Sri Lankan Schools
By Pakirathan
வெல்லவாய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பாடசாலை மாணவன் ஒருவரின் பிரேதம் மீட்கப்பட்டுள்ளது.
வீடொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் பாடசாலை மாணவர் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 16 வயதுடைய பாடசாலை மாணவர் எனவும், அவர் இந்த வருடம் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மரணத்திற்கான காரணம்
குறித்த மாணவன் வீரசேகரகம பிரதேசத்தில் வசிப்பவர்.
குறித்த மாணவன் தற்கொலை செய்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகளை வெல்லவாய காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி