தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல் - விலையில் திடீர் மாற்றம்
இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இன்றைய தினம் தங்கத்தின் விலையில் எழுச்சி பதிவாகியுள்ளது.
எனினும் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகிறது.
அதன்படி, இன்றையதினம் (12) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 620,797 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்றைய தினம் 24 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 175,200 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 160,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தங்கத்தின் விலையானது பாரிய அளவில் எழுச்சி கண்டமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தங்க நிலவரத்தின் முழு விபரம்

தங்கம் அவுன்ஸ் விலை - ரூபாய் 620,797.00
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை - ரூபாய் 21,900.00
24 கரட் 8 கிராம் (1 பவுன்)தங்கத்தின் விலை - ரூபாய் 175,200.00
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை - ரூபாய் 20,080.00
22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை - ரூபாய் 160,600.00
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை - ரூபாய் 19,170.00
21 கரட் 8 கிராம் (1 பவுன் ) தங்கத்தின் விலை - ரூபாய் 153,300.00