அதிபர் தேர்தல் குறித்து வெளியிடப்படவுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு
இலங்கையின் அதிபர் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் அல்லது ஓகஸ்ட் மாத தொடக்கத்தில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று சுயாதீன தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்குமிடையில் தேர்தல் இடம்பெறக் கூடும் என்று ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போதைய தேர்தல் சட்டமே தேர்தல் நடைமுறையை நிர்வகிக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
10 பில்லியன் ரூபா செலவு
இதேவேளை எதிர்வரும் அதிபர் தேர்தலுக்கு 2024ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாக்காளர்களைப் பதிவு செய்யும் பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஜூலை மாதத்துக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக குறிப்பிட்டார்.
இந்த நிலையில் எதிர்வரும் அதிபர் தேர்தலுக்கான செலவு 10 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |