சிறிலங்காவின் உத்தியோகபூர்வ கையிருப்பு..! மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு
Central Bank of Sri Lanka
Sri Lanka
By Kanna
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் விபரம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, கடந்த மாத (செப்டெம்பர்) இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 1,777 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஓகஸ்ட் மாத கையிருப்பு
இதேவேளை, கடந்த ஓகஸ்ட் மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 1,717 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் சீன மக்கள் வங்கியின் இடமாற்று வசதியும் அடங்கும்,
இது சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமானது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்