நடமாடும் ஆய்வாளர் ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை
பேருந்தில் அனுமதிக்கப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கையை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக 20,000 ரூபா இலஞ்சம் கோரிப் பெற்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நடமாடும் பரிசோதனை அதிகாரி ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சித் கொட்டுபிட்டிய என்பவருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கை விசாரணை செய்த கொழும்பு மேல் நீதிமன்றத்தின் 6ஆம் இலக்க நீதிபதி மொஹமட் மிஹால், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
முறைப்பாட்டுத் தரப்பு நடவடிக்கை
இதன்படி, குற்றவாளிக்கு நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, 40,000 ரூபா அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சார்பில், அதன் உதவிப் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான கசுன் பெர்னாண்டோ குணவர்தனசூரிய இந்த வழக்கின் முறைப்பாட்டுத் தரப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |