போராட்டம் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் இன்று வெளியீடு!
ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள போராட்டம் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் இன்று வெளியாகவுள்ளது.
ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளதுடன் பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.
திரைப்படத்தை தயாரிப்பாளரும் தொழிலதிபருமான ஐபிசி கந்தையா பாஸ்கரன் தயாரித்துள்ளார்.
முழுநீளத் திரைப்படம்
போராட்டம் திரைப்படத்தின் மூலம் பாஸ்கரன் றீகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

திரைப்படத்திற்கு U சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் அதன் முதல் பார்வையில் (First Look) அவர் உதைப்பந்தாட்ட வீரராக தோன்றியமை ரசிகர்கள் மத்தியில் திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
ஈழ சினிமாவில் இதுவரை வெளியாகியுள்ள திரைப்படங்களில் நீளமான முழுநீளத் திரைப்படமாக போராட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பாடல்கள் ரசிகர்கள்
இந்நிலையில், ஏற்கனவே திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இன்று வெளியாகவுள்ள ட்ரெய்லர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
ஈழ சினிமாவில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் முயற்சியாக உருவாகியுள்ள போராட்டம் திரைப்படம் இலங்கையில் மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஐபிசி தமிழின் தயாரிப்பில் வெளியாகும் நான்காவது முழுநீள திரைப்படமான போராட்டம், எதிர்வரும் ஒக்டோபர் இரண்டாம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், திரைப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகள் தொடர்பான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் இன்று வெளியாகவுள்ள அதிகாரப்பூர்வ ட்ரெய்லருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |