ரஷ்யாவில் இன்று ஏற்பட்ட பெரும் அனர்த்தம் : புகை மண்டலமாக காட்சியளிக்கும் நகரம் (காணொளி)
Russo-Ukrainian War
Russia
By Sumithiran
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் உள்ள கிராஸ்னோக்வார்டேஸ்கி மாவட்டத்தில் உள்ள எரிபொருள் கிடங்கில் இன்று (3) ஞாயிற்றுக்கிழமை,பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நகரிலுள்ள ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள ருச்சி (ஸ்ட்ரீம்லெட்ஸ்) எரிபொருள் கிடங்கில் வெடிப்புச் சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
தீ விபத்திற்கு காரணம்
எரிபொருள் தாங்கியே தீ விபத்திற்கு காரணம் என ரஷ்ய அவசரகால அமைச்சகம் கூறியுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.