ட்ரம்ப் - ஈரான் பதற்றம்: உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு
ஈரான் முன்வைத்த ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான முன்மொழிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்ததைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
இதன்படி, WTI கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 1.7 சதவீதம் உயர்ந்து 93.47 அமெரிக்க டொலர் அளவில் பதிவாகியுள்ளது.
அதேவேளை, பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 2.23 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 105 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹோர்முஸ் நீரிணை
இதனிடையே, முர்பான் (Murban) கச்சா எண்ணெய் விலை 3.81 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய்க்கு 113.1 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரான் முன்வைத்த நிபந்தனைகள் மற்றும் அதனை ட்ரம்ப் நிராகரித்துள்ளமை காரணமாக, எண்ணெய் விநியோகம் தொடர்பான நிச்சயமற்ற நிலை அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |