ரஷ்யாவிற்கு ஏற்பட்ட மற்றுமொரு இழப்பு :பற்றியெரியும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை
ரஷ்யாவின் சமாரா மாகாணத்தில் உள்ள குய்பிஷேவ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடிப்புகள் ஏற்பட்டு பற்றி எரிவதாக ரஷ்ய டெலிகிராம் சனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குய்பிஷேவ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடிப்பு ஏற்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து
வெடிவிபத்தின் விளைவாக, சமாரா மாகாணத்தில் உள்ள நோவோகுய்பிஷெவ்ஸ்க் நகருக்கு அருகில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
சுத்திகரிப்பு நிலையம் ஆளில்லா விமானம் மூலம் தாக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா விடுத்த கோரிக்கை
இதனிடையே பைனான்சியல் டைம்ஸ், ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் பிற எரிசக்தி உள்கட்டமைப்பைத் தாக்க வேண்டாம் என்று அமெரிக்கா உக்ரைனை வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
Російські пабліки опублікували відео пожежі після вибухів на Куйбишевському НПЗ.
— Українська правда ✌️ (@ukrpravda_news) March 23, 2024
Відео: Mash pic.twitter.com/lBxXQYdaE7
ஏனெனில் இது எரிசக்தி விலைகள் மேலும் அதிகரிக்க வழிவகுக்கும் என்று அது கவலை கொண்டுள்ளது.
எனினும் உக்ரைன் அதிபர் அலுவலகத்தின் தலைவரின் ஆலோசகர் மைக்கலோ பொடோலியாக், ரஷ்யாவின் எண்ணெய் உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை உக்ரைன் நிறுத்த வேண்டும் என்று வோஷிங்டன் கோருவதை மறுத்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |