கனேடிய மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை
கனடாவின் சில பகுதிகளுக்கு 50 சென்ரிமீற்றர் வரை குளிர்கால புயல் மற்றும் பனிப்பொழிவு ஏற்படக் கூடுமென கனேடிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்போது, இளவேனிற் காலம் ஆரம்பமாகும் முதல் வாரத்திலிருந்து இந்த பனிப்புயல் நிலைமைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு
டொரன்டோ உள்ளிட்ட பகுதிகளுக்கான முன்னறிவிப்பில் பெப்ரவரியில் பதிவான 6.4 சென்ரிமீற்றர் பதிவை விடவும் 15 சென்ரிமீற்றர் வரை பனிப்பொழிவு அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, அல்பேர்ட்டா மாகாணத்தில் 10 முதல் 30 சென்ரிமீற்றர் பனிப்பொழிவு நீடிக்கும் என வானிலை மையத்தினால் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
போக்குவரத்திற்கு பாதிப்பு
அத்தோடு, பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் ஒன்றாரியோவிலும் பனிப்பொழிவு நிலைமை அவதானிக்க கூடிய மட்டத்தில் இருக்குமெனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என்றும் ஓட்டுநர்கள் தங்கள் விளக்குகளை இயக்கவும், வாகனங்களுக்கிடையிலான பாதுகாப்பான தூரத்தை பராமரிக்கவும் நினைவூட்டப்படுகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |