ஆரம்பமாகும் சாதாரணதரப் பரீட்சை: பணியில் இறங்கிய காவல்துறையினர்
Nihal Talduwa
Sri Lanka Police
Sri Lankan Peoples
G.C.E. (O/L) Examination
Education
By Dilakshan
க. பொ. த சாதாரணதரப் பரீட்சை(G.C.E. (O/L) EXAMINATION) பரீட்சார்த்திகளின் பாதுகாப்புக்காக விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதற்காக 2000 காவல்துறைய உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ(Nihal Thalduwa) குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இவ்வருடத்திற்கான கல்விப் பொதுச் சான்றிதழ் பரீட்சை நாளை (06) நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமாகவுள்ளது.
திட்டமிடல்கள்
அத்தோடு, இந்த ஆண்டு 452,979 பரீட்சார்த்திகள் சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
அதேவேளை, சாதாரணதரப் பரீட்சை ஆரம்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்