முதியோருக்கான ஜூலை மாத கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
Money
Aswasuma
By Sathangani
முதியோருக்கான ஜூலை மாதத்துக்கான நிவாரண கொடுப்பனவுகள் குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, குறித்த கொடுப்பனவு இன்று (30) முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுமென நலன்புரி நன்மைகள் சபை (Welfare Benefits Board) தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், 600,768 பயனாளிகளுக்காக, 3004 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நலன்புரி நன்மைகள் சபை
முதியோர் கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ளும் பயனாளிகள் இன்று முதல் அவர்களின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளிலிருந்து தங்களின் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை அஸ்வெசும முதல் கட்ட பயனாளிகளில் 1,424,548 பயனாளிகளுக்கு 11,296,461,250 ரூபா (11 ஆயிரத்து 296 மில்லியன் ரூபா) உதவித் தொகையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்