இளமையுடன் பல ஆண்டுகள் வாழ்வது எப்படி? வைத்தியர் தரும் அட்வைஸ்
வயதாவதை தடுத்து இளமையாக இருக்க கரிசாலைக் கற்பம் அருமருந்தாய் இருக்கிறது என்கிறார் வைத்தியர் கௌதமன்,
உடலில் ஏற்படும் மாற்றங்களை குறிப்பாக வளர்சிதை மாற்றங்கள் என்று கூறப்படுகிறது. புதிய செல்களினுடைய உற்பத்தி, பழைய செல்கள் இறந்து போகின்ற நிலை - ஆகிய இவ்விரண்டுக்கும் இடையிலான விகிதாசாரமே உடலியல் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
இந்த விகிதாசாரத்தை மாற்ற முடியுமா என்பதே இன்றைய மருத்துவ உலகில் பேசுபொருளாக இருக்கிறது. ஒருவேளை இந்த விகிதாசாரம் மாற்ற முடியும் என்று வரும்போது மனிதன் இளமையாகவே நீண்ட காலம் இருக்க முடியும் என மருத்துவ அறிஞர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆயுர்வேத மருத்துவர்கள் “இளமையுடன் பல ஆண்டுகள் வாழ்வது எப்படி” என்பதை தெளிவாக கூறியிருக்கிறார்கள்,
வயதாவதை தடுத்து இளமையாக இருக்கச் செய்யும் “கரிசாலைக் கற்பம்” எனும் மிகச்சுலபான மருந்தை இலகுவாக செய்வது எப்படி? வைத்தியர் தரும் விளக்கங்கள் இதோ,