மின்சாரக் கம்பியில் சிக்குண்டு முதியவர் பலி!
மடூல்சீமை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட எக்கிரிய பகுதியில் குரங்கிடமிருந்து வாழைத்தோட்டத்தைக் காப்பாற்றத் தொடுக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்குண்டு மின்சாரம் தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று(30) இடம் பெற்றுள்ளதாக மடூல்சீமை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் போது, எக்கிரிய பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மடூல்சீமை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட எக்கிரிய பகுதியில் மேற்படி முதியவர் தனது வீட்டுத் தோட்டத்தில் வாழை மரத்தில் உள்ள வாழைக்குலையைக் குரங்கிடமிருந்து காப்பாற்ற வாழை மரம் அருகில் மின்சார வேலியை அமைத்துள்ளார்.
இந்நிலையில் , அதனை கழற்ற முற்பட்டபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் மீகாகியூல வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை மடூல்சீமை காவல்துறையினர். மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |