கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Accident
By Thulsi
அனுராதபுரம் - திறப்பனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து திறப்பனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் ஞானிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது
திறப்பனையிலிருந்து கல்குளம் நோக்கிச் சென்ற வான் ஒன்று சைக்கிள் ஓட்டுநர் மீது மோதிய விபத்து இடம்பெற்றுள்ளது.
சாரதி கைது
விபத்தில் பலத்த காயமடைந்த சைக்கிள் ஓட்டுநர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 66 வயதுடைய கல்குளம் பகுதியைச் சேர்ந்த முதியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், திறப்பனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி