சுனாமி பி-ரொம் ஐ விரட்டிய ஜேவிபியின் தித்வா இறைஞ்சல்! வஞ்சிப்பு & வசூல் நினைவு டிச 26!
இலங்கையில் 21 ஆண்டுகளுக்கு முன்னர் இதே டிசம்பர் 26 இல் தாக்கிய சுனாமியின் துன்பியல் நினைவுபடுத்தப்படும் போதுஇப்போது ஆட்சித்தரப்பில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் உள்ளுடனான ஜேவிபியின் பழைய கைங்கரியங்கள் சிலவற்றையும் சொல்லியே ஆகவேண்டும்.
பழைய ரணங்கள் ஏன் கிளறப்படவேண்டும்? எனவும் இப்படியே பழைய ரணங்களை கிளறினால் புதிய நல்லிணக்கத்துக்கு வாய்ப்பு இல்லையென சிலர் முணுமுணுத்தாலும் தமிழினம் சார்பாக இந்த டிசம்பர் 26 ஐ விட்டால் இதனை நினைவூட்டுவதற்கு சரியான இன்னொரு நாள் இருக்கவே முடியாது.
ஏனைனில் 2004 ஆழிப்பேரலை இலங்கையை தாக்கிய பின்னர் அதற்கு மறுவருடமான 2005 இல் உருவான சுனாமிக்குப்பின்னரான மீள்கட்டமைப்பு முகாமைத்தவ திட்டம் (Post-Tsunami Operational Management Structure ) என்ற பொதுக்கட்டமைப்பு உடன்பாடு கைவிடப்பட்ட வஞ்சிப்பின் கதை இது.
அன்று ஜேவிபிக்கு முப்பத்தொன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்த நிலையில் இந்த பிரொம் கட்டமைப்பை எதிர்த்து நீதிமன்றம் அது சென்றது.
இந்த வழக்கைப் போட்ட மனுதாரர்களான நால்வரில் ஒருவர் தற்போதைய அரசதலைவர் அநுரகுமார திசாநாயக்க. தமிழர்களுக்கு சுனாமி நிதியை பங்கிடும் இந்த பொறிமுறையானது சிறிலங்கா அரசியலமைப்கைப மீறுவதாக குற்றஞ்சாட்டிய ஜேவிபி அரசதலைவர் கூட தமிழதாயகத்துக்கு நிதியை ஒதுக்க உடன்பட முடியாது என்றும் சீறியது.
இவ்வாறாக ஜேவிபியால் அடுக்கப்பட்ட கரணங்களின் அடிப்படையில், சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் இந்த திட்த்தை வலுவிழக்கவைத்தது.
ஆனால் இப்போது அதே ஜேவிபி அரசாங்கமாக இருந்து கடந்த மாத தித்வா சூறாவளிக்குப் பின்னர் எல்லா வெளிநாடுகளிடமும் இறைஞ்சி நிதிபெறுகிறது.
அவர்கள் போடும் டீல்களுக்கும் தலையாட்டும் நிலையில் இந்த விடயங்களை தொட்டுவருகிறது செய்தி வீச்சு …
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |