இஸ்ரேலை விட மூத்த வயதான பெண்ணை சுட்டுக்கொன்றது இஸ்ரேல் படை (காணொளி)
“இஸ்ரேலை விட மூத்தவர்” என்று கூறி வைரலாகி வந்த பாலஸ்தீன வயதான பெண் ஒருவர் இஸ்ரேலிய படையினரின் சினைப்பர் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
பாலஸ்தீன புகைப்படக் கலைஞர் சலே அல்ஜஃபராவி ஹாதியா, நாசரின் மரணத்தை வியாழக்கிழமை அறிவித்தார்.
ஓய்வெடுக்கும் இடத்தை சொர்க்கமாக்கட்டும்
“என் அன்பே, நீ தியாகியாகிவிட்டாய். கடவுள் உங்கள் மீது கருணை காட்டட்டும், உங்கள் ஓய்வெடுக்கும் இடத்தை சொர்க்கமாக்கட்டும், ”என்று அல்ஜஃபராவி சமூக ஊடக தளமான X இல் பதிவிட்டுள்ளார்.
This grandmother is Hadia Nassar. She was born in 1944 and lived through the Nakba of 1948. In October this video of her went viral and she was injured on her hand and head from the bombing but still smiled nonetheless.
— Karim Wafa Al-Hussaini (@DrKarimWafa) December 7, 2023
She was martyred yesterday ?
pic.twitter.com/CEhWas557m
"இஸ்ரேலிய இராணுவத்தினர் (நாசரை) அவரது வீட்டின் வாசலில் துப்பாக்கியால் சுட்டனர்" என்பதை அவரது உறவினரிடமிருந்து தான் அறிந்ததாக அல்ஜஃபராவி கூறியதாக அல்-ஜசீரா தெரிவித்தது.
“நீங்கள் இஸ்ரேலை விட மூத்தவர்”
இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் காயமடைந்து குணமடைந்து மருத்துவமனையில் இருந்தபோது அவரைச் சந்தித்த அல்ஜஃபராவி வெளியிட்ட காணொளியில் தோன்றிய பின்னர் நாசர் பிரபலமான நபராக ஆனார்.
الحاجة هادية نصار أقدم من اسرائيل ?♥️??
— Saleh Aljafarawi (@S_Aljafarawi) October 22, 2023
الحاجة أصيبت في القصf والحمد لله صحتها تماام التماام
الله يحميكي ياا حجتنا ويطول في عمرك ♥️ pic.twitter.com/V4y3DGNmzB
அந்த காணொளியில், பாலஸ்தீனிய புகைப்படக் கலைஞர் அந்த முதியவரின் அடையாள அட்டையை பிடித்து, “நீங்கள் இஸ்ரேலை விட மூத்தவர்” என்று கூறினார். "நிச்சயமாக, நிச்சயமாக," என நாசர் பதிலளித்தார், "நான் (பாலஸ்தீன) நிலத்தை பிடித்துக் கொண்டிருக்கிறேன்." எனவும் அவர் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |