உலகின் பழைமையான மொழி: சுவிஸ் பத்திரிகையாசிரியர் வழங்கிய சுவார்ஸ்ய பதில்
சுவிட்சர்லாந்தின் (Switzerland) Coop என்ற வியாபார நிறுவனத்தின் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் உலகின் பழைமையான மொழி எது என்ற கேள்விக்கு சுவார்ஸ்யமான பதில் ஒன்றை வழங்கியுள்ளார்.
குறித்த வியாபார நிறுவனமானது, வாராந்தம் Coopzeitung என்ற பத்திரிகையை வெளியிடும்.
இந்த நிலையில், Coopzeitung வார பத்திரிகையில் 95 ஆம் பக்கத்தில், யாராவது ஒரு கேள்வி கேட்பார்கள் அதற்கு பத்திரிகை ஆசிரியர் பதில் அளிப்பார், அதன்படி இந்த வாரம் உலகத்தில் பழமையான மொழி எது என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
இலங்கை
அதற்கு அவர்கள் அளித்த பதிலில், உலகில் மிகவும் பழமையான, இன்றும் பேசப்படுகின்ற மொழி என்று முதலாவதாக தமிழைத்தான் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதேவேளை, சீனம், அரபு, பேர்சி மற்றும் அரமேயம் ஆகிய மொழிகளை மிகவும் பழமையான மொழிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக உலகப் படத்தில் தமிழ் பேசும் இடம் என்று நேரடியாக இலங்கையை சுட்டிக்காட்டி இருப்பது சிறப்பம்சமாகும்.
இந்த பத்திரிகையின் பதிவில் கடைசியாக கேள்விக்கான பதிலாக தமிழ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
