இலங்கையின் மூத்த நபர் காலமானார்
Sri Lanka
Sri Lankan Peoples
By Kathirpriya
இலங்கையின் மூத்த நபராக கூறப்படும் கருதப்படும் கொட்டாச்சி நந்தியாஸ் என்பவர் காலமாகியுள்ளார்.
நேற்றைய தினம் (12) அன்னார் இறந்துவிட்டதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
110 வயது நிரம்பிய இவர் இலங்கையின் மூத்த நபராக தேசிய முதியோர் செயலகம் அடையாளம் கண்டு தெரிவித்திருந்தது.
1914 ஆம் ஆண்டு பிறந்தார்
நாட்டிலேயே மூத்தவராக இருந்த இவர், நாகொட, கப்பிட்டியாகொடையை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.
இந்த மாகல கொட்டாச்சி நந்தியாஸ் 1914 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் திகதி பிறந்தார்.
தேசிய முதியோர் செயலகம்
இவரை தேசிய முதியோர் செயலகம் நாட்டிலேயே மிகவும் வயதானவர் என்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் கொட்டாச்சி நந்தியாஸ் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
இவரது இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் (13) பத்தேகம மயானத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 53 நிமிடங்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்