2036ற்கான ஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவில்!
இந்தியாவில் 2036-ல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கர்செட்டி தெரிவித்துள்ளார்.
நிடா அம்பானியின் முயற்சியில் 40 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கூட்டம் இந்தியாவில் மும்பையில் நடைபெற்று வருகிறது.
ஒலிம்பிக் போட்டி
சுமார் 600 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ள இக் கூட்டத்தில் 2036 ல் இந்தியா ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்ததாவது, 2029 ஆம் ஆண்டு இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு இந்தியா விரும்புகிறது.
உலகின் மிகப்பெரும் விளையாட்டு நிகழ்ச்சியான ஒலிம்பிக் போட்டிகளை 2036 ஆம் ஆண்டு நடத்தவும் இந்தியா விரும்புகிறது. இது 140 கோடி இந்தியர்களின் கனவு.
இதனை நாங்கள் நிறைவேற்ற விரும்புகிறோம். இதற்கு சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் உதவும் என்று உறுதியாக நம்புகிறேன் என தெரிவித்திருந்தார்.
கிரிக்கெட் போட்டி
இக் கூட நிறைவில் இந்தியாவின் 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் என்ற அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் 2028ல் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் டி20 கிரிக்கெட் போட்டி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்புதலை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கூட்டம் அளித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிரிக்கெட் போட்டியானது 1900 க்கு பின்னர் ஒலிம்பிக்கில் இடம்பெறவில்லை என்பதால் இவ் விளையாட்டை ஒலிம்பிக்கில் சேர்க்குமாறு பல தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ரசிகர்களின் எண்ணிக்கை
மேலும் பேஸ்பால், சாஃப்ட் பால், ஃப்ளாக் கால்பந்து, லேக்ரோஸ், ஸ்குவாஷ் போட்டிகலும் 2028 லாஸ் ஏஞ்செல்ஸ் ஒலிம்பிக்கில் இடம்பெறும் என கூறப்படுகிறது.
இதனால் ஒலிம்பிக் போட்டிக்கான ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அடுத்தவருடத்திற்கான பாரிஸ் ஒலிம்பிக் போட்டி ஜூலை 26ம் தேதி தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.