டோக்கியோ ஒலிம்பிக்கில் வரலாற்று சாதனை படைத்த சிறுமி!
ஜப்பானிய வீராங்கனை நிஷியா மோமிஜி பெண்களுக்கான முதல் பனிச்சறுக்கு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று ஒலிம்பிக்கின் வரலாற்றை புதுப்பித்துள்ளார்.
ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்ற இளம் வயதான தடகள வீரர் என்ற பெருமையை 13 வயதான நிஷியா மோமிஜி வசப்படுத்திக் கொண்டுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் முன்முறையாக அறிமுகமான "ஸ்கேட்போர்ட்டிங்" (பனிச்சறுக்கு) விளையாட்டின் முதலாவது தங்கப்பதக்கத்தை ஜப்பான் நாட்டின் இளம் வீரர் யூட்டோ ஹொரிகோம் வென்றிருந்தார்.
அதன் பினர் ஒரு நாள் கழித்து நடைபெற்ற பெண்களுக்கான போட்டியில் ஒசாக்காவைச் சேர்ந்த 13 வயது நிஷியா மோமிஜி வெற்றிபெற்று ஜப்பானுக்கு மீண்டும் ஒரு தங்கப்பதக்கம் பெற்றுக் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த 13 வயது வீராங்கனையான ரைசா லீலுடன் இடம்பெற்ற பலத்த போட்டியின் பின்னர் ஜப்பான் சிறுமி இந்த சாதனையை படைத்துள்ளார். இப்போட்டியில் 13 வயதான நிஷியா மோமிஜி 15.26 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.
இரண்டாவது இடத்தை பெற்ற ரைசா லீல் 14.64 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் ஜப்பானுக்கு வெண்கலப் பதக்கமும் கிடைத்ததுடன் அதனை 16 வயதான நகயாமா ஃபூனா என்ற வீராங்கனை 14.49 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
1960 இல் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இளவயதுடைய ரோவர் கிளாஸ் ஜெர்டா மற்றும் 1936 இல் அமெரிக்காவைச் சேர்ந்த மார்ஜோரி கெஸ்ட்ரிங் அயன் என்போரும் இளவயது சாதனையாளர்களாக தடம் பதித்திருந்தனர்.
இதனடிப்படையில் ஒலிம்பிக் வரலாற்றில் மூன்றாவது தடவையாக இளம் வயதுடைய ஒருவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.