பிரித்தானியாவில் சர்ச்சைக்குரிய சாமியார் மீதான வழக்கு ஆரம்பம் - குற்றச்சாட்டுகளை நிராகரித்த சரவணபவ பாபா
பிரித்தானியாவில் பாலியல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய சாமியாரான ஓம் சரவணபவ பாபா என அழைக்கப்படும் முரளிகிருஷ்ண புலிக்கர் மீதான வழக்கு விசாரணை இன்று லண்டன் முடிக்குரிய நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய காவல்துறையினரின் தடுப்புக்காவலில் இருந்தபடி இன்றைய வழக்கு விசாரணையில் காணொளி வாயிலாக பங்கேற்ற முரளிகிருஷ்ண புலிக்கர் தன்மீதான பாலியல் வன்புணர்வு உட்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
அவர் மீதான வழக்கு
லண்டனில் பிரபல சாமியார் கைது!! அதிர்ச்சியில் பக்தர்கள்!! |
கடந்த மாதம் கைதுசெய்யப்பட்ட குறித்த சாமியார் மீது பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதால் இவ்வாறான குற்றச்சாட்டுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் கடுமையான சட்ட நடைமுறைகள் காரணமாக பிணை வழங்கப்படாமல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று அவர் மீதான வழக்கு ஆரம்பமாகியிருந்தது.
குற்றஞ்சாட்டப்பட்டவர் தனக்கு மலையாள மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியை கோரியதாக கூறப்பட்டுள்ள நிலையில் இந்த மாத இறுதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியாவில் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சாமியாருக்கு பிணை மறுப்பு!!
