பிரித்தானியாவில் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சாமியாருக்கு பிணை மறுப்பு!!

Tamils London United Kingdom Sexual harassment
By Independent Writer Jun 12, 2023 05:14 PM GMT
Independent Writer

Independent Writer

in குற்றம்
Report

பல்லேறு பாலியல் குற்றச்சாட்டுக்களின் பெயரில் கைதுசெய்யப்பட்டு கடந்த 3 நாட்களாக பிரித்தானிய காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டுவந்த முரளிக்கிருஷ்ணா என்ற சாமியார் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், பிணை மறுக்கப்பட்டு மீண்டும் காவல்துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாலியல் தொடர்பான வழக்குகளுக்கு பிரித்தானிய நீதிமன்றங்களில் பிணை கிடைப்பது கடினம் என்று கூறப்பட்டுவந்த நிலையிலேயே, இன்று அவருக்கான பிணை மறுப்பு இடம்பெற்றுள்ளது. 

பிரித்தானியாவில் ஒரு தொகுதி ஈழத் தமிழர்கள் மத்தியில் பிரபல்யமான சாமியார் முரளிகிருஸ்ணன் என்பவரை Colindale காவல்துறையினர்  கடந்த வெள்ளிக்கிழமை  கைதுசெய்தது யாவரும் அறிந்ததே.

கடந்த இரண்டரை நாட்களாக அவர் மீது கால்துறையினர் மேற்கொண்ட கடுமையான விசாரணைகளைத் தொடர்ந்து இன்று காலை 9.30 மணியளவில் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

பாலியல் முறைகேட்டு குற்றச்சாட்டு

பிரித்தானியாவில் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சாமியாருக்கு பிணை மறுப்பு!! | Charges To Muralikrishna

லண்டனில் பிரபல சாமியார் கைது!! அதிர்ச்சியில் பக்தர்கள்!!

நீதிமன்றத்தின் இணையத்தளத்தில் அவரது வழக்கு சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், 'பாலியல் முறைகேட்டு' குற்றச்சாட்டுக்களே முரளிகிருஷ்ண சுவாமிகளின் மீது சுமத்தப்பட்டுள்ளது” என தெரியவந்துள்ளது.

16 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதையுடைய பெண் மீது பாலியல் வன்முறை புரிந்துள்ளதான (Rape) ஒரு குற்றச்சாட்டும், 16 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதையுடைய பெண் ஒருவர் மீது பாலியல் ரீதியிலான தாக்குதலை மேற்கொண்டார் (sexual Assault) என்கின்றதான மற்றொரு குற்றச்சாட்டும், ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவு செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டார் (attempt to rape) என்கின்ற மற்றொரு குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக நீதிமன்ற இணையத்தளப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியச் சட்டத்தின் பிரகாரம் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிடமுடியாது என்றும் நீதிமன்ற இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆபாச காணொளிகள்

பிரித்தானியாவில் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சாமியாருக்கு பிணை மறுப்பு!! | Charges To Muralikrishna

தன்னை கடவுள் என்று கூறிவருகின்ற கேரளாவைச் சேர்ந்த குறிப்பிட்ட இந்தச் சாமியார் மீது அண்மைக்காலமாக பலவிதமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அண்மைக்காலமாக குறிப்பிட்ட அந்தச் சாமியார் தொடர்பான ஆபாச காணொளிகள் சமூகவலைத்தளங்களில் பரிமாறப்பட்டு வந்ததுடன், பல பெண்களுக்கு அவர் அசிங்கமான செய்கைகளை வெளிப்படுத்துவதான காணொளிகளை அனுப்பியதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. 

அதேவேளை, குடிவரவு குடியகல்வு மீறல்கள் உட்பட வேறு பல குற்றச்சாட்டுக்களும் குறிப்பிட்ட இந்த முரளிகிருஷ்ணா மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும், அது பற்றிய விசாரணைகள் அடுத்த வருகின்ற நாட்களில் நடைபெறலாம் என்றும் கூறப்படுகின்றது.

அதேவேளை, குறிப்பிட்ட இந்த சாமியாரினால் பாதிக்கப்பட்ட வேறு யாராவது ஈழத்தமிழர்கள் இருந்தால், அவர்கள் காவல்துறையினரிடம் முன்வந்து சாட்சிபகரவேண்டும் என்று புலம்பெயர் சட்டத்தரணி ஒருவர் கேட்டுக்கொண்டார்



ReeCha
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025