கொழும்புக்கான விமான செயற்பாடுகளை இரத்து செய்ய தீர்மானித்த ஓமன் எயர் நிறுவனம்
ஓமன் எயர் நிறுவனமானது கொழும்புக்கான தனது விமான செயற்பாடுகளை இரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஓமன் எயர் நிறுவனம், தற்போது புதிய மாற்றங்களை உருவாக்க இருப்பதனால் அதன்பொருட்டு தனது விமான சேவைகளில் மாற்றங்களை செய்துள்ளது.
தனது போட்டி நிறுவனங்களிடம் இருந்து சந்தையில் தனது நிலையை வலுப்படுத்துவதற்காக நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிதி செயற்திறனையும் மேம்படுத்த தீர்மானித்துள்ளது.
பருவ காலங்கள்
தவிரவும், ஓமன் எயர் அதன் வலையமைப்பில் பல மூலோபாய மாற்றங்களையும் அறிவித்துள்ளது.
அதன்படி, ஓமன் எயரின் புதிய வழித்தடமான சியால்கோட்டைச் சேர்ப்பது மற்றும் இஸ்லாமாபாத், லாகூர், கொழும்பு மற்றும் சிட்டகாங்கிற்கான விமான செயற்பாடுகளை ரத்து செய்வது ஆகியவை இதில் அடங்குகின்றது.
அதேவேளை, லக்னோ மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இரண்டு இடங்களுக்கு தனது விமான சேவைகளை அதிகரிக்க ஓமன் எயர் தீமானித்துள்ளது.
தவிரவும், பருவ காலங்களின் அடிப்படையில் விமான சேவைகளை மாற்றியமைக்கவும் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதிக வசதி
ஓமன் எயர் இந்த கோடை தொடக்கம், அதன் அட்டவணையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஓமானின் சந்தையை சிறப்பாக பூர்த்தி செய்வதற்கும், ஓமானுக்கு உள்ளேயும் வெளியேயும் முக்கிய சேவையை வழங்குவதற்கும், அதன் பல இடங்களுக்கு விமான நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, நேரடி பயணிகளுக்கு அதிக வசதியை வழங்கவும், இணைப்பு சாளரங்களை அதிகரிக்கவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |